கடைசி ஓவர் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது: இங்கிலாந்து பந்து வீச்சாளர் பென் ஸ்டோக்ஸ் வருத்தம்

0
257

இங்கிலாந்தைச் சேர்ந்த வேகப்பந்து வீரர் பென் ஸ்டோக்ஸ். 24 வயதான அவர் தன்னால் 20 ஓவர் உலக கோப்பை பறிபோகும் என்று எதிர்பார்த்து இருக்க மாட்டார்.

வெஸ்ட்இண்டீஸ் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 19 ரன் தேவைப்பட்டது. அந்த ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார்.

ஏற்கனவே இலங்கை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மேத்யூசுக்கு ஸ்டோக்ஸ் சிறப்பாக வீசி இங்கிலாந்து அணியை வெற்றி பெற வைத்தார். இதனால் அதே நம்பிக்கையில் கேப்டன் மார்கனும் கடைசி ஓவரை வீச அவருக்கு வாய்ப்பு கொடுத்தார்.

ஆனால் நடந்ததோ வேறு மாதிரி. பிராத்வெயிட் முதல் பந்திலேயே சிக்சர் அடித்தார். அடுத்த பந்திலாவது ஸ்டோக்ஸ் நேர்த்தியாக வீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எப்படி வீசினாலும் தன்னால் அதிரடியாக ஆட முடியும் என்பதை பிராத் வெயிட் நிரூபித்தார். 2–வது, 3–வது, 4–வது பந்துகளிடம் தொடர்ந்து சிக்சர் அடித்தார். 4 பந்தில் 4 சிக்சர் அடித்து அவர் வெஸ்ட்இண்டீசை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார்.

தனது மோசமான பந்து வீச்சால் ஸ்டோக்ஸ் இங்கிலாந்தின் உலக கோப்பை வாய்ப்பை பறிகொடுத்தார்.

கடைசி ஓவர் குறித்து ஸ்டோக்ஸ் டுவிட்டரில் கூறியதாவது–

கடைசி ஓவர் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இந்த ஓவர் வருத்தத்தை கொடுத்தது. ஆனாலும் அனனவரும் எனக்கு மலை போல் ஆதரவு அளித்து வருகிறார்கள். எனவே எனது நாட்டுக்காக உலக கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடியதை பெருமையாக கருதுகிறேன்.

எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி மிகவும் சிறப்பாக விளையாடியது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY