(Photo Update) மூதாட்டியை மோதிய மோட்டார் சைக்கிள் தப்பிச் சென்றது: மூதாட்டி ஸ்தலத்தில் மரணம்

0
282

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள செங்கலடியில் இன்று (04) இடம்பெற்ற வீதி விபத்தில் மூதாட்டியொருவர் மரணமானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செங்கலடி பதுளை வீதியை சேர்ந்த 70 வயதுடைய தங்கராசா சந்தனம் என்பவரே மரணித்தவராகும்.

இந்த மூதாட்டி வீதியால் ஓரமாகப் நடந்து கொண்டிருந்தபோது செங்கலடியிலிருந்து பதுளை வீதியூடாக அதிவேகத்துடன் பயணித்த மோட்டார் சைக்கிள் இவரை மோதிவிட்டு மறைந்துள்ளது.

சந்தேகநபரை தேடிப் பிடிப்பதற்கு ஏறாவூர்ப் பற்று பிரதேச சபையின் சீ.சீ.ரி.வி கமராவின் உதவியை நாடியுள்ள ஏறாவூர்ப் பொலிஸார், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

IMG_20160404_095120 IMG_20160404_095136_1 IMG_20160404_095141 IMG_20160404_095259 IMG_20160404_095620

LEAVE A REPLY