உலக வர்த்தக மையத்திலிருந்து பரசூட்டில் குதித்த வெளிநாட்டுப் பிரஜைக்கு படுகாயம்

0
186

கொழும்பு உலக வர்த்தக மையத்திலிருந்து பரசூட்டில் குதித்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் பரசூட் சாகச நிகழ்வுகள் நேற்றும் நேற்று முன்தினமும் கொழும்பில் இடம்பெற்றன. இதன் போது 25 சர்வதேச பரசூட் வீரர்கள் கலந்துகொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகள் அதிகாரிகளால் செய்து கொடுக்கப்பட்டிருந்தன. நேற்று இடம்பெற்ற பரசூட் சாகசத்தின்போது பரசூட் சரியாக இயங்காததினால் ஒருவர் தரை இறங்கும் பொது மரம் ஒன்றில் மோதுண்டு, கீழே விழுந்ததாக தெரியவருகின்றது.

இதனால் படுகாயமடைந்த இதில் காயமடைந்த 44 வயதான அவுஸ்திரேலிய வீரர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY