காத்தான்குடியில் டெங்கு நுளம்பு பெருகக் கூடிய இடத்தை வைத்திருந்த 11 பேருக்கு வழக்கு

0
114

(ஜுனைட் எம்.பஹ்த்)

தற்காலத்தில் டெங்கு நோய்ப்பரவல் அதிகரித்திருப்பதால் காத்தான்குடி சுகாதாரப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 29.03.2016 தொடக்கம் 01.04.2016 ம்திகதி வரை டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சுகாதார பரிசோதகர்கள் தலைமையில் காவல் துறையினர் மற்றும் சுகாதார தொண்டர்கள் உள்ளடக்கிய 15 குழுக்கல் பிரிக்கப்பட்டு மேற்படி டெங்கு பரிசோதனை
இடம்பெற்றது.

காத்தான்குடி சுகாதார 4 பிரிவுகளிலும் மேற்கொள்ளப்பட்ட இப் பரிசோதனையில் டெங்கு நுளம்பு பெருகும் 410 இடங்கள் இனங்காணப்பட்டதுடன் 90 நூளம்பு குடம்பிகளும் கண்டுபிடிக்கப்பட்டது.

அத்துடன் சுமார் 306 நூளம்பு பெருகக் கூடிய இடங்கள் துப்பரவு செய்யப்பட்டதுடன் 179 வீடுகளுக்கு எச்சரிக்கை சிவப்பு கடதாசி வழங்கப்பட்டது.

டெங்கு நூளம்பு பெருகக் கூடிய வகையில் சுகாதாரமற்ற நிலையில் காணப்பட்ட சுமார் 11 வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்துள்ளதாக காத்தான்குடி பொது சுகாதார பரிசோதகர் க.சத்தியானந்தன் தெறிவித்தார்.

அத்துடன் பொதுமக்கள் தங்களது வீட்டுச்சூழல் மற்றும் வெளிச்சூழல்களை டெங்கு நுளம்பு உருவாகாத வகையில் சுத்தமாக வைத்துக்கொள்வதுடன் டெங்கு நோய் தொடர்பில் விழிப்புணர்வுடன் செயற்படுமாறும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் U.L.M.நஸ்ரூத்தீன் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY