பொத்துவில் தள வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணங்களை வழங்கிய முஸ்லிம் காங்கிரஸ்

0
117

பொத்துவில் தள வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (03) பொத்துவில் தள வைத்தியசாலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரத அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டார்.

பொத்துவில் தள வைத்தியசாலையில் மிக நீண்ட கால பிரச்சினையாக இருந்த வைத்திய உபகரணங்ளை சுகாதார பிரதியமைச்சர் பைஸல் காசிம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் ஆகியோரின் கவனத்திற்கொண்டு வந்து உடனடியாக அவர்களின் முன்னெடுப்பில் அதற்கான தீர்வாக தேவையான முக்கிய உபகரங்கள் நேற்று வைத்தியாசலைக்கு அதிகாரிகளிடம் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வின் போது, விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.ஏம். ஹரீஸ், வைத்தியர்கள், உயர்கள் அதிகாரிகளுடன், அரசியல் பிரமுகர்களும், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

அத்துடன் வைத்தியசாலை சமூகத்தினால் குறித்த பிரச்சினைகளை நிறைவேற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கும், சுகாதார பிரதியமைச்சர் பைஸல் காசிம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.

(சப்னி)

LEAVE A REPLY