ஒரே ஆண்டில் மூன்று உலகக் கோப்பைகளை வென்று வெஸ்ட் இண்டீஸ் சாதனை

0
64

6-வது உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது வெஸ்ட் இண்டீஸ். இதற்கு முன்பாக அந்த 2012-ம் ஆண்டு இதே டேரன் சமி தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ஆண்கள் இறுதிப் போட்டிக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணியும் ஆஸ்திரேலியா பெண்கள் அணியும் மோதிய டி20 ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி முதல் முறையாக உலகக் கிண்ணம் வென்று சாதனைப்படைத்தது.

சில மாதங்களுக்கு முன்பு நடந்த 19-வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் வென்றது.

இந்த வெற்றிகள் மூலம் ஓரே ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் மொத்தமாக 3 உலகக் கோப்பைகளை வென்றுள்ளது. இந்த சாதனையானது வெஸ்ட் இண்ட்டிசில் மீண்டும் கிரிக்கெட் விளையாட்டு உத்வேகம் பெற உதவும் என்று கேப்டன் டேரன் சமி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY