(innalillah) மூதூரில் இடம்பெற்ற விபத்தில் காத்தான்குடியைச் சேரந்த ஒருவர் வபாத்; ஒருவருக்கு காயம்

0
536

மூதூர் பகுதியில் இன்று (03) மாலை 8.00 மணியலவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காத்தான்குடி-02, சரீப் புரக்டர் வீதியைச் சேர்ந்த ஜெயினுலாப்தீன் முஹம்மது சாதிக் (வயது-31) என்பவர் வபாத்தாகியுள்ளார். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)

மரணித்தவரும் அவரது தந்தையும் பயணித்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதியதனாலேயே இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் தந்தை காயமடைந்த நிலையில் கிண்ணியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் சாதிக் அவர்களின் ஜனாஸாவும் அதே வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வபாத்தான ஏ.ஜே.எம். சாதிக் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY