2 ஆவது தடவையாக இருபது20 உலக சம்பியனாகியது மேற்கிந்தியத் தீவுகள்

0
195

உலக இருபது20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சம்பியனாகியுள்ளது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட்களால் வென்றது.

கொல்கத்தாவில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ஓட்டங்களைப் பெற்றது. ஜோ ரூட் 36 பந்துகளில் 54 ஓட்டங்களைப் பெற்றார்.

மேற்கிந்திய பந்துவீச்சாளர்களில் கார்லோஸ் பிறாத்வெய்ட் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ட்வைன் பிறாவோ 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

மார்லன் சாமுவேல்ஸ் 66 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 85 ஓட்டங்களைப் பெற்றார். கார்லோஸ் பிறாத்வெய்ட் 10 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களைக் குவித்தார்.

கடைசி ஓவரில் 19 ஓட்டங்கள் தேவைப்பட்டன. மேற்கிந்திய அணிக்கு 4 விக்கெட்கள் கைவசமிருந்தன. பென் ஸ்ட்ரோக் வீசிய அந்த ஓவரின் முதல் 4 பந்துகளில் 4 சிக்ஸர்களை விளாசினார் கார்லோஸ் பிறாத்வெய்ட்.

wi cham 1 wi cham 3

LEAVE A REPLY