மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 156 ஓட்ட இலக்கு

0
141

உலக கோப்பை ‘டுவென்டி–20’ பைனலில் வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக பந்துவீச, இங்கிலாந்து அணி 155 ரன்கள் எடுத்தது.

இந்தியாவில் நடக்கும் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கோல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கும் பைனலில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சமி ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

ஜோ ரூட் அரை சதம்:

இங்கிலாந்து அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரிலேயே பத்ரீ ‘சுழலில்’ ஜேசன் ராய் (0) சிக்கினார். ரசல் ‘வேகத்தில்’ ஹேல்ஸ் (1) வெளியேறினார். கேப்டன் மார்கன் (5) சொதப்பினார். பின் இணைந்த ஜோ ரூட், பட்லர் ஜோடி பொறுப்புடன் செயல்பட்டது. பட்லர் 36 ரன்கள் எடுத்தார். டுவைன் பிராவோ ‘வேகத்தில்’ ஸ்டோக்ஸ் (13), மொயீன் அலி (0) ஆட்டமிழந்தனர். ரூட் (54) அரை சதம் விளாசினார். வில்லே (21) அதிரடி காட்டினார்.

இங்கிலாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்தது. ஜோர்டான் (12), ரஷீத் (4) அவுட்டாகாமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக பிராவோ, பிராத்வைட் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

#Dinamalar

239317 239333 239337

LEAVE A REPLY