நகர்புர பாடசாலை மாணவர்கள் பெறும் பெருபேற்றை போன்ரே கிராமப்புர பாடசாலை மாணவர்கள் சிறந்த பெருபேற்றினை பெறுகின்றார்கள்: ஷிப்லி பாறுக்

0
163

மட்டக்களப்பு மாவட்டத்தில் பூநொச்சிமுனை என்னும் எல்லை கிராமத்தில் அமைந்திருக்கும் இக்றா பாடசாலை மாணவர்கள் கடந்த 2015ஆம் ஆண்டில் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்று பாடசாலை வரலாற்றில் சிறந்ததோர் சாதனையினை நிலைநாட்டியுள்ளார்கள், அம்மாணவர்களை சந்திப்பதற்கும் பாடசாலையின் நிலைமைகளையும் அறிவதற்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் விசேட விஜயமொன்றை அண்மையில் மேற்கொண்டார்.

இவ்விஜயத்தின் போது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களையும் சந்தித்து பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையடினார்.

இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர்,

சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை வாழ்த்தியதுடன், அவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெறுவதற்கு பாடுபட்ட ஆசிரியர்கள், பெற்றோருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார், தொடர்ந்து உரையாற்றிய அவர் கிராமப்புறங்களில் இருக்கும் இவ்வாறன பாடசாலைகளில் சிறந்த வழிகாட்டல்கள் இன்மையினால் திறமையான மாணவர்கள் தமது கல்வியினை தொடராமல் இடைநடுவே விடுகின்றதோர் துர்பாக்கிய நிலமை காணப்படுகின்றது, அதற்கு பிரதான காரணம் வறுமையாகும்.

ஆனாலும் இப்பாடசாலையிலிருந்து க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கு தோற்றிய 13 மாணவர்களில் 8 மாணவர்கள் உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளார்கள் இது ஓர் வரலாற்று சாதனையாகும், இங்கு 8A சித்திகளைப் பெற்ற மாணவர்களை பார்க்கும்போது நகர்புற பாடசாலை மாணவர்கள் அனைத்து வளங்களையும் பெற்ற நிலையில் பெற்றிருக்கின்ற அதே பெறுபேறுகளை பெற்றிருக்கின்றனர் இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.

எனவே இவ்வாறன திறமையான மாணவர்களை நாம் அனைவரும் வளர்க்க வேண்டும் அவர்களுடைய உயர்தர கல்விக்கு பெற்றோர்களாகிய நீங்கள் பல்வேறு தியாகங்களை செய்து அவர்களை சிறந்த கல்விமான்களாக உருவாக்குவதற்கு பாடுபடவேண்டும். இன்ஷால்லாஹ் விஞ்ஞான துறையில் கல்விகற்கும் 3 மாணவர்களுக்கு கல்வி செலவுகளுக்காக மாதாந்தம் 1000.00 ரூபா வீதமும் மற்ற துறைகளில் கல்விகற்கும் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி செலவுகளுக்காக மாதாந்தம் 500.00 ரூபா வீதமும் எனது சொந்த நிதியிலிருந்து ஒரு வருடத்திற்கு வழங்குவதாக கூறினார்.

இவ்வாறு வழங்குவதன் நோக்கம் அவர்கள் தமது கல்வியினை இடைநடுவே நிறுத்திவிடாமல், சமூதாயத்தில் சிறந்தவர்களாக வரவேண்டும் என்பதற்காகவே என்னாலான ஒரு உதவியினை இவ்வாறன திறமையான மாணவர்களுக்கு மேற்கோள்கின்றேன்.

மேலும் தற்போதுள்ள நல்லாட்சியில் கல்விக்காக அதிகமான நிதியினை ஒதிக்கியுள்ளது அதனூடாக பாடசாலைகளை அபிவிருத்தியடைய செய்து மாணவர்களின் கல்வியறிவினை மேம்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஆகவே அனைவரும் தனது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காக பாடுபடவேண்டு. இன்ஷால்லாஹ் எதிர்வரும் காலங்களில் இப்படசாலையின் அபிவிருத்தி செயற்பாட்டிகாக பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொள்ள முயற்சிகளை மேற்கொள்வதாக மாகாண சபை உறுப்பினர் தெரிவித்தார்.

(எம்.ரீ. ஹைதர் அலி)

LEAVE A REPLY