1 நிமிடத்திற்குள் 1 Kg நிறையுடைய மரக்கறிகளை வெட்டும் இயந்திரம்: சாய்ந்தமருது இளைஞன் சாதனை

0
259

(எம். எஸ்.எம். சாஹிர்)

sammஇன்றைய நவீன உலகில் நேரத்தையும் காலத்தையும் மீதப்படுத்தி குறுகிய நேரத்திற்குள் கூடிய விளைத்திறனை எதிர்பார்க்கும் சமுதாயமே உருவாகியிருக்கின்றது. அந்தவகையில் உணவகங்கள், சிறு கைத்தொழிலாளர்கள் மற்றும் குடிசைக் கைத்தொழிலாளர்கள் என்று பலரையும் கவரும் வண்ணத்திலும் வேலைகளை இலகுபடுத்தும் விதத்திலும் 1 நிமிடத்திற்குள் 1 கிலோ கிராம் நிறையுடைய அனைத்துவிதமான மரக்கறி வகைகளையும் சேதாரமின்றி சுகாதாரமிக்கதாக மிக விரைவாக அரிந்தும் வெட்டியும் கொடுக்கக்கூடிய இயந்தரம் ஒன்றினை சாய்ந்தமருது பிரதேசத்தினைச் சேர்ந்த ஐ.எல்.ஏ. அஸீஸ் எனும் இளம் தொழில்நுட்பவியலாளர் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.

samm 3இவ் இயந்திரம் சுமார் 60 ஆயிரம் ரூபா விலையில் சந்தைப்படுத்த முடியுமென்றும் மற்றும் நாளை 04ஆந் திகதி சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் தலைமையில், விஞ்ஞான மற்றும் தொழிலுல்நுட்ப அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளும் விதாதா வள நிலைய அங்குரார்ப்பண நிகழ்வில், பொது மக்களின் காட்சிக்கு வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரைப்போன்ற இளம் கண்டுபிடிப்பாளரை நாம் ஊக்கப்படுத்துவதுடன், சாய்ந்தமருது பொது மக்களும், புத்திஜீவிகளும் மற்றும் தொழில் முயற்சியாளர்களும் ஐ.எல்.ஏ. அஸீஸ்க்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

LEAVE A REPLY