பசிபிக் கடல் பகுதியில் உள்ள நாட்டில் 7.2 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

0
142

வடக்கு ஆஸ்திரேலியா பகுதியில் இருந்து சுமார் 1350 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள தீவுக்கூட்டங்களை கொண்ட வனுவாட்டு நாட்டில் இன்று ரிக்டர் அளவில் 7.2 அலகிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இங்குள்ள சான்ட்டோ தீவில் இருந்து 151 கிலோமீட்டர் தூரத்தில் பூமியின் அடியில் சுமார் 35 கிலோமீட்டர் ஆழத்தில் உருவான நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 12 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட வனுவாட்டு நாட்டில் சுமார் மூன்று லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளிடம் கடந்த 1980-ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற வனுவாட்டுவை தாக்கிய இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பொருளிழப்பு தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

LEAVE A REPLY