பசியென உணவு கேட்ட பிள்ளையை கம்பியால் சுட்ட பாட்டி கைது

0
148

பசியென கோரி உணவு கேட்ட பிள்ளைக்கு இரும்புக் கம்பியை நெருப்பில் சுட வைத்து அக்கம்பியால் பாதத்தில் சூடு வைத்த பாட்டி உறவுமுறையுடைய பெண்ணை(55) சம்மாந்துறை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பேரப்பிள்ளை தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினார். மேற்படி பிள்ளை கடும் பசியென கூறி தனது பாட்டியிடம் பிஸ்கட் கேட்டுள்ளது. இதன்போது கோபமடைந்த அப்பெண் இரும்புக் கம்பியை நெருப்பில் பழுக்க வைத்து அதனை அப்பிள்ளையின் பாதத்தில் வைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

-TM-

LEAVE A REPLY