பாதிக்கப்பட்ட முள்ளந்தண்டு வடங்களை சீர் செய்யும் ஸ்டெம் செல்ஸ்: விஞ்ஞானிகள் சாதனை

0
157

சம கால மருத்து தொழில்நுட்பத்தில் ஸ்டெம் செல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன. காரணம் உயிரினங்களில் பாதிக்கப்பட்ட பாகங்களை இலகுவாக புதுப்பிப்பதற்கு இவை உதவுவதாலாகும்.

அத்துடன் ஸ்டெல் செல்களின் உதவியுடன் ஆய்வுகூடத்தில் செயற்கை முறையில் இதயத்தினை விஞ்ஞானிகள் வளர்த்துவருகின்றமை கூட தெரிந்ததே.

தற்போது பாதிப்படைந்த முள்ளந்தண்டு வடங்களை மீளவும் வளர்ச்சியடையச் செய்யும் நுட்பத்தினை உருவாக்கி கலிபோர்னிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

இம்முறைமையானது முதன் முதலில் எலிகளில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

இப் பரிசோதனை வெற்றியளிப்பின் மனிதர்களில் மட்டுமன்றி ஏனைய விலங்குகளிலும் பாதிக்கப்பட்ட முள்ளந்தண்டு வடத்திற்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க முடியும் என குறித்த விஞ்ஞானிகள் குழுவில் இடம்பெற்றிருந்த “Mark Tuszynski ” என்பவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY