டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி: இங்கிலாந்து துடுப்பாட்டம்

0
174

6–வது 20 ஓவர் உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. அரை இறுதியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தையும், வெஸ்ட் இண்டீஸ் இந்தியாவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இரு அணிகளும் 2–வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. 2010–ம் ஆண்டு இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது.

2012–ம் உலக கோப்பையில் இலங்கையை தோற்கடித்து வெஸ்ட்இண்டீஸ் சாம்பியன் ஆனது. 2–வது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் இரு அணிகளும் உள்ளன. இதில் வெல்லும் அணி 2–வது முறை கோப்பை வென்ற அணி என்ற பெருமையை பெறும்.

வெஸ்ட்இண்டீஸ் அணியில் அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு பஞ்சம் இருக்காது. கிறிஸ்கெய்ல், சார்லஸ், சாமுவேல்ஸ், ரஸ்சல், டாரன் சமி, சிம்மன்ஸ் போன்ற வீரர்கள் உள்ளனர். ரன் இலக்கு எவ்வளவாக இருந்தாலும் அதை எடுக்கக்கூடிய அணியாக திகழ்கிறது. மேலும் பந்து வீச்சிலும் சம பலத்துடன் உள்ளது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அதிரடியை சமாளிக்க இங்கிலாந்து முழு திறமையை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.

அந்த அணியில் நேசன் ராய், ஹால்ஸ், ஜோ ரூட், பட்லர், ஸ்டோக்ஸ் போன்ற அதிரடி வீரர்கள் உள்ளனர். பந்து வீச்சில் ஜோக்டன், புளுங்கெட், டேவிட் வில்லிடாப்லே போன்றோர் இருக்கிறார்கள். லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து பந்து வீச்சை கிறிஸ் கெய்ல் விளாசி சதம் அடித்தார். இதனால் அவரை விரைவில் அவுட் ஆக்குவது இங்கிலாந்துக்கு முக்கியம்.

இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.

அணி விபரம்:

இங்கிலாந்து: ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், இயான் மோர்கன், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷீத், டேவிட் வில்லி, லியாம் பிளங்கெட்.

வெஸ்ட் இண்டீஸ்: ஜான்சன் சார்லஸ், கிறிஸ் கெய்ல், சாமுவேல்ஸ், லென்டில் சிமன்ஸ், ஆந்த்ரே ரசல், தினேஷ் ராம்தின், டுவைன் பிராவோ, டேரன் சமி, கார்லோஸ் பிராத்வெய்ட், பத்திரி, சுலைமான் பென்.

LEAVE A REPLY