இரண்டாவது தடவை T20 உலகக் கிண்ணம் யாருக்கு? இன்று பலப்பரீட்சை

0
246

டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் சமபலத்தில் இருப்பதால், விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

இந்தியாவில் நடக்கும் ‘டுவென்டி–20’ உலக கிண்ணத் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியாவின் கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கும் பைனலில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

கெய்ல் பலம்:

சம்பள ஒப்பந்த பிரச்னையில் இருந்து ஒருவழியாக மீண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி இம்முறை அசத்தியது. அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது.

அணியின் மிகப் பெரும் பலம் கெய்ல் தான். லீக் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக சதமடித்த இவர் இன்றும் அசத்தலாம். ஜான்சன் சார்லஸ் மீண்டும் சிறந்த துவக்கம் தர வாய்ப்பு உண்டு. சாமுவேல்ஸ் எழுச்சி காண வேண்டும். சிம்மன்ஸ், ஆன்ட்ரி ரசல் மீண்டும் அதிரடியாக ரன் சேர்க்கலாம். பின்வரிசையில் களமிறங்கும் தினேஷ் ராம்தின், டுவைன் பிராவோ, கேப்டன் டேரன் சமி உள்ளிட்டோரும் விளாசினால், இமாலய இலக்கை எட்டலாம்.

ரசல் மிரட்டல்:

வேகப்பந்துவீச்சில் ஆன்ட்ரி ரசல் நம்பிக்கை அளிக்கிறார். ஐந்து போட்டியில் 8 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ‘மிடில்–ஓவரில்’ டுவைன் பிராவோ (6 விக்.,) ஆறுதல் அளிக்கிறார். ‘சுழலில்’ சாமுவேல் பத்ரீ (7 விக்.,) பலம் சேர்க்கிறார். இவருக்கு சுலைமான் பென் (2 விக்.,) ஒத்துழைப்பு அளித்தால் நல்லது.

ராய் விளாசல்:

இங்கிலாந்து அணிக்கு ‘பேட்டிங்கில்’ ஜோ ரூட் (195 ரன்), ஜேசன் ராய் (183), ஜாஸ் பட்லர் (155) நம்பிக்கை அளிக்கின்றனர். தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 44 பந்தில் 83 ரன்கள் குவித்த ஜோ ரூட் இன்றும் அசத்தலாம். நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 44 பந்தில் 78 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்ட ஜேசன் ராய் மீண்டும் நல்ல துவக்கம் தர காத்திருக்கிறார். இலங்கைக்கு எதிராக 37 பந்தில் 66 ரன்கள் எடுத்த ஜாஸ் பட்லர் ‘மிடில் ஆர்டரில்’ பலம் சேர்க்கிறார். அலெக்ஸ் ஹேல்ஸ், கேப்டன் இயான் மார்கன், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்டோர் அதிரடி காட்டும் பட்சத்தில் ‘மெகா’ ஸ்கோரை பதிவு செய்யலாம்.

‘சுழல்’ ஜாலம்:

வேகப்பந்துவீச்சில் டேவிட் வில்லே (7 விக்.,), கிறிஸ் ஜோர்டான் (6), பென் ஸ்டோக்ஸ் (4) சிறப்பாக செயல்படுகின்றனர். லியாம் பிளங்கட் (2 விக்.,) எழுச்சி கண்டால் நல்லது. ‘சுழலில்’ மொயீன் அலி (5 விக்.,,), அடில் ரஷித் (4) ஆறுதல் அளிக்கின்றனர்.

#Dinamalar

LEAVE A REPLY