குடும்பிச் சண்­டையில் நான் ஈடு­பட வேண்­டிய அவ­சி­ய­மில்லை: ரவூப் ஹக்கீம்

0
53

இன்று சிலர் பத்­தி­ரி­கை­களில் அறிக்கைப் போர் நடத்திக் கொண்­டுள்­ளனர். நான் மௌன­மாக இருந்து கொண்டு கட்­சியை கச்­சி­த­மாக வழி நடத்திக் கொண்டு போவ­தற்கு எண்­ணு­கின்றேன்.

இன்று ஏற்­பட்­டுள்ள சவால்­களை விடவும் பெரிய சவால்­களை சந்­தித்­துள்ளோம். இன்று ஏற்­பட்­டுள்ள குடும்பிச் சண்­டையில் நான் ஈடு­பட வேண்­டிய அவ­சி­ய­மில்லை.

இவ்­வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும், நகர திட்­ட­மிடல், நீர் வழங்கல் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் சம்­மாந்­துறை ஆதார வைத்­தி­ய­சா­லையில் நேற்று பூர்த்­தி­யாக்­கப்­பட்ட அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­களை திறந்து வைத்­ததன் பின்னர் உரை­யாற்றும் போது தெரி­வித்தார்.

கிழக்கு மாகாண சபையின் சுகா­தார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் தலை­மையில் நடை ­பெற்ற இவ்­வை­ப­வத்தில் அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,கடந்த மாகாண சபைத் தேர்­தலில் நாங் கள் தனித்துப் போட்­டி­யிட்டு சம்­மாந்­துறைத்தொகு­தியை வெற்றி கொண்டோம். அந்தத் தேர்­தலில் எங்­க­ளுக்­கு­ரிய மாகாண சபை முத­ல­மைச்சர் பத­வியை சற்று தாம­தப்படுத்தி கிழக்கு மாகாண சபையின் சுகா­தார அமைச் சர் பத­வியைப் பெற்றுக் கொண் டோம்.

அந்த அமைச்சர் பதவி மூல­மாக சம்­மாந்­துறை ஆதார வைத்­தி­ய­சா­லைக்கு பல அபி­வி­ ருத்­தி­களை செய்ய முடிந்­துள்­ளன. இந்த வைத்­தி­ய­சாலை மட்­டு­மன்றி சூழ­வுள்ள ஏனைய வைத்­தி­ய­சா­லை­களும் அபி­வி­ருத்­தி­களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புக் கள் ஏற்­பட்­டுள்­ள­தை­யிட்டு அனைவரும் சந்­தோ­ஷப்­ப­டு­கின்றோம்.

அடுத்த ஐந்தாம் திகதி தொடக்கம் பாரா­ளு­மன்றம் ஒரு அர­சியல் யாப்பு சபை­யாக செயற்­ப­ட­வுள்­ளது. வெகு­வி­ரை­விலே இந்த நாட்­டிற்கு புதிய அர­சியல் யாப்பை உரு­வாக்­கின்ற கட்டம் ஆரம்­ப­மாக இருக்­குகின்­றது. இதன் போது எமது சமூகம் சார்ந்த விட­யங்­க­ளையும், உரி­மை­க­ளையும் பெற்றுக் கொள்­வ­தற்­கு­ரிய முயற்­சி­களில் ஈடு­ப­ட­வுள்ளோம்.

இரண்டு பிர­தான கட்­சி­களின் ஆட்சி நாட் ­டிலே இருக்­கின்ற சூழலில் நாட்டில் பொரு­ளா­தார நெருக்­கடி கொஞ்சம் உக்­கிரம் அடை­கின்ற பின் புலத்தில் நாங்கள் நீண்ட காலமாக அடை­வ­தற்கு காத்­தி­ருந்த அபி­விருத்­தி­களை சாதித்துக் கொள்­வ­தற்­கான தயார்­ப­டுத்­தல்­களை செய்து கொண்டு வந்துள்ளோம். என்­னு­டைய அமைச்சின் ஊடாக நீர்­வ­ழங் கல் வடி­கா­ல­மைப்பு சபை சம்­மாந்­துறை வங்­க­ளா­வ­டி­யி­லுள்ள நீர் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்தி­லி­ருந்து கல்­முனை வரை­யி­லான நீர் வழங் கல் திட்­டத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான புதிய குழாய் பதிக்கும் வேலைகள் முடி­வ­டையும் தறு­வாயில் உள்­ளன.

எதிர்­வரும் நோன்பு காலத்­திற்கு முன்­ன­தாக இப்­பி­ர­தே­சத்தில் நிலவும் நீர் வழங்கல் பிரச்­சி­னை­களை முழு­மை­யாக தீர்க்­கலாம் என்ற நம்­பிக்­கை­யோடு நட­வ­டிக்­கை­களை எடுத்துக் கொண்டு வரு­கின்றோம்.

மேலும், நெய்­னா­காடு போன்ற பிர­தே­சங்­க­ளுக்கும் விரை­வாக நீர் வழங்க நட­வ­டிக்­கை­களை எடுத்­துள் ளோம். இதற்கு அடித்­த­ள­மிட்ட தலைவர் அஷ்­ரப்பை நினைவு கூரு­கின்றோம்.

சும்­மாந்­துறை பிர­தே­சத்­தினை நகர அபி­வி­ருத்தித் திட்­ட த்தின் கீழ் அபிவிருத்தி செய்யவுள்ளோம். சம்மாந் துறைக்கு சந்தைக் கட்டிடத் தொகுதி, பஸ் நிலையம், நகர சபையாக மாற்றுவதற்கும் நடவடிக்கைகளை எடு த்துக் கொண்டு வருகின்றோம்.

கல்முனை நகரை அபிவிருத்தி செய்யும்போது அத னோடு இணைந்தவாறு சம்மாந்துறையும் அபிவிருத்தி செய்யப்படும் என்றார்.

LEAVE A REPLY