ஏறாவூர் மென்பந்து கிரிக்கெற் சுற்றுப் போட்டியில் அஹமட் பரீட் விளையாட்டுக் கழகம் சம்பியனாகத் தெரிவு

0
142

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

ஏறாவூர் நகரில் சனிக்கிழமை (02.04.2016) நடைபெற்ற கிரிக்கெற் மென்பந்து சுற்றுப்போட்டி இறுதி நிகழ்வில் அஹமட் பரீட் விளையாட்டுக் கழகம் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

‘NFGG நல்லாட்சிக்கான தேசிய முன்னணி” வெற்றிக் கிண்ணம் 2016’ எனும் மகுடத்திலான மென்பந்து கிரிக்கெற் சுற்றுப் போட்டி கடந்த இரண்டு நாட்களாக ஏறாவூர் மீராகேணி அஹமட் பரீட் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வந்தது.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அனுசரணையோடு றினோ விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட இந்த மென்பந்து கிரிக்கெற் சுற்றுப் போட்டியில் ஆறு கழகங்கள் கலந்து கொண்டன. சனிக்கிழமை இடம்பெற்ற இறுதிப் போட்டியில் ஏறாவூர் அஹமட் பரீட் விளையாட்டுக் கழகம் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது. இந்த இறுதி நிகழ்வையொட்டி பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் சிலவும் நடாத்தப்பட்டன.

இதில் வெற்றியீட்டிய மற்றும் பங்குபற்றிய கழகங்களுக்கும், வீரர்களுக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர் அப்துர்ரஹ்மான் வெற்றிக் கிண்ணத்தையும் பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

LEAVE A REPLY