மழை வருவதை அறிவிக்கும் ஸ்மார்ட் குடை

0
157

மழை வருவதை முன்கூட்டியே தெரிவிக்கும், ஸ்மார்ட் குடையை, பிரான்ஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது. ஸ்மார்ட் போனின், புளூ-டூத்துடன் இணைக்கப்பட்ட இந்த குடையில், ஒரு கேப்சூல் பொருத்தப்பட்டுள்ளது. அதில் உள்ள சென்சார், காற்றின் திசை, வேகம், வெப்பநிலை மற்றும் வெளிச்சம் ஆகியவை குறித்த தகவல்களை தெரிவிக்கிறது.

பதினைந்து நிமிடங்களில் மழை வருமா, வராதா என்பதையும் இந்த குடை தெரிவிக்கிறது.
வெப்ப நிலையின் அளவை பதிவு செய்யும் வகையில், இந்த ஸ்மார்ட் குடையின் மேல் பகுதியில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது; தண்ணீர் புகாதபடி தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் மேற்பகுதி, பளபளப்பான பட்டு துணியால் தயாரிக்கப்பட்டுள்ளது. கன மழை, புயல் மற்றும் பனிப்புயலையும், இந்த ஸ்மார்ட் குடை தெரிவிக்கும் என்று, இதன் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

LEAVE A REPLY