இந்திய அணியின் சிறந்த தலைவர் டோனி: கங்குலி

0
113

இந்திய அணியின் சிறந்த தலைவர் டோனி என்று முன்னாள் அணித்தலைவர் சவுரவ் கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார். இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 தலைவரான டோனி, டி20 உலகக்கிண்ணத்தில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தினார்.

இந்நிலையில் இந்தியா அரையிறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் தோற்று தொடரில் இருந்து வெளியேறியது.

இந்தப் போட்டி பற்றி முன்னாள் இந்திய அணித்தலைவர் கங்குலி கூறுகையில், ”மேற்கிந்திய தீவுகள் அணிக்கு மும்பை மைதானம் 2 நாட்களுக்கு முன்பே பழக்கப்பட்ட இடமாக மாறிவிட்டதாக நினைக்கிறேன்.

அந்த அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அரையிறுதியில் 193 ஓட்டங்களை எட்டுவது என்பது சவாலான விடயம்.

மேலும், டோனி இந்திய அணிக்கு சிறந்த தலைவராக இருக்கிறார். எல்லோரும் சிறந்தவர்களாக இருக்க மாட்டார்கள். ஆனால் டோனி சிறந்தவர் என்றே கருதுகிறேன்.

நாம் எல்லோரும் இந்தியா கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்றே விரும்பினோம். இறுதிப் போட்டியில் சிறந்த அணிகளான இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY