ஏறாவூர் கிரிகெட் சுற்றுப்போட்டியில் அப்துர் ரஹ்மான் பிரதம அதிதி!

0
137

ஏறாவூர் பிரதேசத்தில் நேற்று  (02.04.2016) நடை பெற்ற கிரிகெட் சுற்றுப் போட்டி இறுதி நிகழ்வில்பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

‘NFGG வெற்றிக் கிண்ணம் 2016’ எனும் மகுடத்திலான மென்பந்து கிரிகெட் சுற்றுப் போட்டியொன்று கடந்த இரண்டுநாட்களாக ஏறாவூர் மீராகேணி அகமட் பரீட் விளையாட்டு மைதானத்தில் நடை பெற்றது.இச்சுற்றுப் போட்டியின்இறுதிப் போட்டியும், பரிசளிப்பு நிகழ்வும் நேற்று ஏறாவூரில் நடை பெற்றது. இந்த நிகழ்வுகளின் போதே பிரதமஅதிதியாக பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் கலந்து கொண்டார்.

NFGG யின் அனுசரணையோடு றினோ விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இந்த மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டி நடாத்தப்பட்டது. இதில் ஆறு  கழகங்கள் கலந்து கொண்டதோடு நேற்றைய இறுதிப் போட்டியில் அகமட்பரீட் விளையாட்டுக் கழகம் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது. இந்த இறுதி நிகழ்வையொட்டி பாரம்பரியவிளையாட்டுப் போட்டிகள் சிலவும் நடாத்தப்பட்டன.

இதில் வெற்றியீட்டிய மற்றும் பங்கு பற்றிய கழகங்களுக்கும், வீரர்களுக்கும் பொறியலாளர் அப்துர் ரஹ்மான்வெற்றிக்கிண்ணத்தையும் பரிசில்களையும, வழங்கி வைத்தார்.  இந்நிகழ்வில் NFGG யின் பொதுச் செயலாளர் நஜா முஹம்மட், கொள்கை பரப்புச் செயலாளர் சிராஜ் மசூர் , தலைமைத்துவ சபை உறுப்பினர்களானஅஷ்ஷெய்க்  றிஸ்ம் மற்றும், அபுல் ஹஸன் ஆகியோரும் NFGGயின் காத்தான்குடி பிராந்திய சபைஉறுப்பினர்களான ASM ஹில்மி , MHA நஸீர் ஆகியோரும் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.அத்தோடுமுன்னாள் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் முகம்மட் சித்தீக் அவர்களும், மற்றும் முன்னாள் நகர சபைஉறுப்பினர் A. நஸீர் அவர்களும் அதிதிகளாகக் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தனர்.

LEAVE A REPLY