பல்கலைக்கழகங்களுக்கு மேலும் ஆயிரம் மாணவர்களை உள்வாங்கவும்

0
104
இவ்வருடம் பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக ஆயிரம் மாணவர்களை உள்வாங்குமாரு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2013ஆம் ஆண்டில் கா.பொ.த. உயர்தரப் பரீட்சையில் போதுமான சித்திகளைப் பெற்றிருந்த மாணவர்களைப் பல்கலைக்கழங்களில் அனுமதிக்க சுமார் ஆறு மாதகாலம் தாமதம் ஏற்பட்டமைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கல்வி அமைச்சர் கண்டித்துள்ளார்.

இந்நிலையில் 2014, 2015ஆம் வருடங்களில் உயர்தரப் பரீட்சையில் சித்திபெற்றவர்களை பல்கலைக்கழக அனுமதியில் படிப்படியாக அதிகரிக்குமாறும் அவர்களுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், பல்கலைக்கழகங்களில் தற்சமயம் 1,190 விரிவுரையாளர்களுக்கு நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY