வாட்ஸ்ஆப்பில் அழிக்கப்பட்ட குறுந்தகவல்களை மீட்பது எப்படி.??

0
252

லேன்ட்லைன் மற்றும் மொபைல் போன் அழைப்புகளை இண்டர்நெட் செயலிகளான ஸ்கைப், வாட்ஸ்ஆப் அல்லது வைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் வசதி விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இண்டர்நெட் சேவை வழங்குவோர் மற்றும் டெலிகாம் நிறுவனங்களுக்கிடையே சேர்த்திணைத்த ஒப்பந்தங்களுக்கு அரசு அனுமதி அளித்திருப்பதை தொடர்ந்து இந்த சேவை வழங்கப்பட இருக்கின்றது.

புதிய சேவை வழங்கப்படும் நிலையில் வாய்ஸ் கால்களுக்கு கட்டணம் குறைக்கப்படலாம். ஆனால் இந்த சேவையை பயன்படுத்த அதிவேக இண்டர்நெட் தேவை என்பது கவலைக்குரிய விஷயமாக கருதப்படுகின்றது. தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் வாட்ஸ்ஆப் செயலியில் தவறுதலாக அழிக்கப்பட்ட குறுந்தகவல்களை மீட்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்ஆப்

முதலில் போனின் இன்டர்னெல் மெமரி அல்லது SD Card சென்று Whatsapp > Databases ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

டேட்டாபேசஸ்

டேட்டாபேசஸ் ஃபோல்டரில் msgstore-2014-01-04.1.db.crypt. என்ற பெயரில் பல்வேறு ஃபைல்களை காண முடியும். இதோடு அவைகளில் என்று உருவாக்கப்பட்டது என்பதை குறிப்பிட தேதியும் காணப்படும்.கூடவே msgstore.db.crypt என்ற ஃபைல் தெரியும். அது தான் முக்கியமான ஃபைல் ஆகும்.

ரீநேம்

அடுத்து ஃபைலின் பெயரை மாற்றியமைக்க வேண்டும், அதாவாது msgstore.db.crypt என்ற ஃபைலை backup-msgstore.db.crypt என்ற பெயருக்கு மாற்ற வேண்டும்.

பேக்கப்

ஃபைலின் பெயரை மாற்றியவுடன் உங்களுக்கு தேவையான தேதியின் ஃபைலை மாற்றியமைக்க வேண்டும்.

ரீநேம்

மீண்டும் msgstore.db.crypt ஃபைலின் பெயரை மாற்ற வேண்டும். இதற்கு Setting > Applications > manage applications > Whatsapp, சென்று Clear Data என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது அனைத்து தரவுகளும் அழிக்கப்பட்டு விடும்.

ரீஸ்டோர்

இனி msgstore.db.crypt ஃபைல் ரீஸ்டோர் செய்யப்பட்டு விடும். பின் நீங்கள் வாட்ஸ்ஆப் செயலியை திறந்தால் பேக்கப் ஃபோல்டரில் இருந்து குறுந்தகவல்களை ரீஸ்டோர்  செய்யும் ஆப்ஷன் உங்களது திரையில் தெரியும். இங்கு ரீஸ்டோர் பட்டனை க்ளிக் செய்தால் அழிக்கப்பட்ட குறுந்தகவல்கள் மீட்கப்பட்டு விடும்.

LEAVE A REPLY