மற்றுமொரு சூட்டுச் சம்பவம் சம்மாந்துறையில்

0
322

உணவு கேட்ட சிறுமிக்கு சூடு வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று சம்மாந்துறை-அட்டப்பளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

55 வயது பெண் ஒருவர் தனது மருமகனின் 5 வயது பிள்ளைக்கு கரண்டியால் சூடு வைத்துள்ளார். சிறுமி உணவு கேட்டு அழுதபோதே குறித்த பெண் கரண்டியை நெருப்பில் காய்ச்சி சிறுமிக்கு சூடு வைத்துள்ளார்.

சூட்டுக் காயத்துடன் சிறுமி நிந்தவூ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சூடு வைத்ததாக கூறப்படும் பெண்ணை பொலீசார் கைது செய்துள்ளனர்.

சம்மாந்துறை பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY