ஹிஸ்புல்லாஹ்வின் உம்ரா முயற்சியும் வெளிவரும் விமர்சனமும் நியாயமானதா?

0
297

(முகம்மது பர்ஸாத்)

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியில் கடந்த வாரம் 100 பேர் புனித உம்றா பயணம் மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பான பல்வேறு கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரிமாறப்பட்டு வருகிறது.

இப் பயண விடயத்தில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் அதற்கான ஆதாரம் இருந்தால் குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் அவற்றை சாட்சியத்துடன் முன் வைக்க வேண்டும்.

அவ்வாறு ஊழல் எதுவும் இடம்பெறவில்லை என்றிருந்தால், அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தரப்பினால் கீழ் குறிப்பிடப்படும் வடயங்களுக்கு பதில் தருவதே சிறந்தது.

>உம்ராவுக்கு அனுப்பியவர்களின் பெயர் பட்டியல் விபரம்.
>எதிர்காலத்தில் அனுப்ப இருக்கும் பெயர் பட்டியல் விபரம்.
>அதற்கு ஒருவருக்கு அரபி வழங்கிய பணம் எவ்வளவு.
>முஅத்தின் மற்றும் மௌலவிமார்கள் அன்றி உதவி வேலைகளுக்காக அனுப்பி >வைக்கப்பட்டவர்களின் விபரம்.
>அவர்கள் எவ்வாறு எதன் ஊடாக அனுப்பப்பட்டார்கள்.

போன்ற விடயங்களை ஆதரத்துடன் முன் வைத்து பகிரங்கப்படுத்துமாக இருந்தால் காலத்துக்கு பொருத்தமாகவும் உண்மையின்றி உருவம் கொடுக்கும் கட்டுரைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளியாகவும் அமையும் என்பதே உண்மை.

LEAVE A REPLY