போராளிகளோடு போராளியாக இரண்டறக்கலந்து நன்றிப் பூக்களை சமர்ப்பனமாக்கிய ரவூப் ஹக்கீம்

0
186

(ஷபீக் ஹுஸைன்)

கடந்த மாதம் 19 ஆம் திகதி பாலமுனையில் சுமார் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட போராளிகளின் அர்ப்பணிப்பான பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற தேசிய மாநாடானது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வரலாற்றில் மிகப்பிரமாண்டமான வெற்றியை தேடித்தந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்பிரமாண்டமான வெற்றியில் முழுமையான பங்களிப்பை வழங்கிய, தேசிய மாநாட்டை சிறப்பாக நடாத்தி முடிக்க அரும்பாடுபட்ட போராளிகளுக்கும், தொண்டர் படையணிக்கும் நன்றி தெரிவிக்குமுகமாக தேசிய மாநாடு இடம்பெற்ற பாலமுனை மைதானத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் இன்று (02) மதிய போசன விருந்துபசாரம் வழங்கப்பட்டு கெளரவமளிக்கப்பட்டது.

பாலமுனை தேசிய மாநாடானது இலங்கை முஸ்லிம்களின் உரிமைக்குரலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அரசியல் வலிமையை உள்நாட்டிற்கும், சர்வதேசத்திற்கும் பறைசாற்றியதேன்றால் மிகையாகாது.

மதிய போசன விருந்துபசாரத்தை தொடர்ந்து ரவூப் ஹக்கீமினால் நன்றி தெரிவித்து சிறப்புரையாற்றப்பட்டதுடன், அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு பொண்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

_03 _04 _DSC0511 _DSC0523 _DSC0691 _DSC0694 _DSC0707

LEAVE A REPLY