அஷ்ரப் ஒற்றுமைப்படுத்திய முஸ்லிம் மக்களை இன்று ஹக்கீமும் ரிஷாடும் பிரித்து விட்டனர்: வட்டரக்க விஜித தேரர்

0
195

முஸ்­லிம்­களின் தலைவர் அஷ்­ரப்பின் காலத்தில் முஸ்­லிம்கள் ஒற்­று­மைப்­பட்­டி­ருந்­தனர். அவர்­க­ளுக்கு எதி­ரான சதி­களை  முறி­ய­டித்­தனர். அஷ்­ர­புக்குப் பின்பு ஹக்­கீமும், ரிசாத்­ப­தி­யு­தீனும் முஸ்­லிம்­களை பிள­வு­ப­டுத்­தி­விட்­டனர்.

இத­னாலே சில இன­வாதக் குழுக்கள்  முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக  முன்­வைக்கும் குற்­றச்­சாட்­டு­களை ஒற்­று­மைப்­பட்டு எதிர்­கொள்ள அவர்­களால் முடி­யா­துள்­ளது என ஜாதிக பல­சே­னாவின்  செய­லா­ளரும், மஹி­யங்­கனை  பிர­தேச  சபையின் முன்னாள் உறுப்­பி­ன­ரு­மான வட்­ட­ரக்க விஜித தேரர் தெரி­வித்தார்.

இலங்­கையில் ஐ.எஸ்.தீவி­ர­வாத அச்­சு­றுத்தல் இல்லை என்று பாது­காப்பு  செய­லாளர்  தெரி­வித்­துள்ள நிலையில் பொது­ப­ல­சேனா  அமைப்பும் சிங்­கள ராவ­யவும் இலங்கை  முஸ்­லிம்­களை ஐ.எஸ்.தீவி­ர­வா­தத்­துடன்  தொடர்­பு­ப­டுத்தி  குற்றம் சுமத்­து­கின்­றன.

இந்தக் குற்­றச்­சாட்­டுகள் மூலம் இலங்­கையின்   முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டு­களை தூண்­டு­வ­தற்கு முயற்­சிக்­கின்­றனர். இலங்­கையில் எங்­கா­வது குண்டு வெடித்தால் ஐ.எஸ்.தீவி­ர­வா­தத்தை சம்­பந்­தப்­ப­டுத்தி  முஸ்­லிம்­களைப் பலிக்­க­டா­வாக்கப் பார்க்­கி­றார்கள் என்றும்  அவர் கூறினார்.

இலங்­கையில் ஐ.எஸ்.தீவி­ர­வாதம் தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யிலே  அவர் இவ்­வாறு  தெரி­வித்தார்.  தொடர்ந்தும் அவர் கருத்து வெளி­யி­டு­கையில்  முஸ்­லிம்கள் தொடர்பில்  உண்­மை­யான கருத்­து­களை நான் வெளி­யி­டு­வதால் பொது­ப­ல­சேனா போன்ற அமைப்­புகள் என்னை எதிர்க்­கின்­றன.

எனது ஊடக மகா­நாட்டைக் குழப்­பி­னார்கள்.  காடை­யர்கள் மூலம் என்னைத் தாக்­கி­னார்கள்.
முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை தடுப்­ப­தற்கு முஸ்லிம்  அர­சியல் தலை­வர்கள் ஒன்­று­பட வேண்­டி­யுள்­ளது. ஆனால் இன்று அவர்கள் தேசிய மகா­நா­டு­களை நடாத்தி  தங்­களைப் பலப்­ப­டுத்திக் கொள்ளும் முயற்­சி­களில் ஈடு­ப­டு­கி­றார்­க­ளே­யன்றி  சமூ­கத்தை ஒற்­று­மைப்­ப­டுத்­து­வதில் கரி­ச­னை­யற்று இருக்­கி­றார்கள்.

முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் சமூ­கத்தை ஒற்­று­மைப்­ப­டுத்­தாத வரையில் இளை­ஞர்­களை  நேர்­வ­ழிப்­ப­டுத்த முடி­யாது. இலங்­கைக்குள் ஐ.எஸ். அமைப்பு உரு­வாக்­கப்­பட்டால் இணைந்து   கொள்­வ­தற்குத் தயா­ராக இருக்­கி­றார்கள். அதனால் சமூ­கத்தை  நல்­வ­ழிப்­ப­டுத்த வேண்­டி­யது. முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களின்  கட­மை­யாகும்.

இந்­நாட்டில் அனைத்து இன மக்­களும் நல்­லி­ணக்­கத்­து­டனும் ஒற்­று­மை­யு­டனும் வாழ­வேண்டும். அதற்­கான  வழி அமைக்­கப்­ப­ட­வேண்­டு­மென்­பதே ஜாதிக பல­சே­னாவின் இலட்­சி­ய­மாகும்.  கடந்த  ஆட்­சிக்­கா­லத்­திலும் சில பெளத்த இன­வாத  அமைப்­புகள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயற்­பட்­டன.  இந்த அர­சாங்­கத்தின் காலத்­திலும் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக  குரல் எழுப்பி வரு­கின்­றன.

முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான குற்­றச்­சாட்­டு­களை நிரா­க­ரிப்­ப­தற்கு முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களே  முன் வர­வேண்டும். ஜனா­தி­பதி மைத்திரிபால சிறிசேன  கட்டுநாயக்க விமான நிலையத்தின்  பாதுகாப்பை பலப்படுத்தும் படி உத்தரவிட்டுள்ளார்.

சிங்களராவய அக்மீமன தேரர் ஐ.எஸ்.ஸை இலங்கையிலும் தடைசெய்ய  வேண்டும் என்கிறார். இவ்வாறான குழப்பமான சூழ்நிலையில்  ஐ.எஸ்.தீவிரவாதம் இல்லை என்று நிரூபிப்பது முஸ்லிம் அரசியல் தலைவர்களின் பொறுப்பாகும் என்கிறார்.

LEAVE A REPLY