காரமுனை – ஆலங்குளம் மக்கள் படும் துயரங்களை பார்வையிட்ட ஷிப்லி பாறுக்.

0
174

மட்டக்களப்பு மாவட்டத்தின், வாகரை – கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காரமுனை மற்றும் ஆலங்குளம் தமிழ், முஸ்லிம் கிராமங்களுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் காரமுனை ஜூம்ஆ பள்ளிவாசல் மற்றும் இரு கிராமங்களிலும் வசிக்கும் பொதுமக்களின் அழைப்பையேற்று அன்மையில் திடிர் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

இவ்விஜயத்தின்போது காரமுனை கிராமத்திற்கு செல்லும் வீதியில் முறையற்ற விதத்தில் நாளாந்தம் கொட்டப்படும் குப்பை கூழங்களை தேடி வரும் யானைகள் அவ்வீதியால் பயணிக்கும் பொதுமக்களுக்கு தீங்கிழைக்கும் இடங்களையும், அத்தோடு 2015.10.28ஆந்திகதி யானைகளின் தாக்குதழுக்கு இலக்காகி மரணமடைந்த மையன் பாவா ஹனீபா என்பவரை தாக்கிய இடத்தினையும் நேரில் சென்று பார்வையிட்டதோடு, பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டு வரும் யானைகளுக்கான மின்சார வேலியினையும், காரமுனை – ஆழங்குளம் இரு கிராமங்களையும் இணைக்கும் பொதுமக்கள் அன்றாடம் பல சிரமங்களுக்கு மத்தியில் பயணிக்கும் வீதியினையும் பார்வையிட்டதோடு அவ்வழியால் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களின் அவல நிலையினையும், அன்றாடம் தொழிலுக்குச் செல்லும் பொதுமக்களின் அவல நிலையினையும் தன் கண்ணுடாக நேரில் சென்று பார்வையிட்டதோடு, இங்குள்ள பாடசாலைக்கு மாணவர்கள் பிரதான வீதியிலிருந்து 2 கிலோ மீட்டர் நடைபாதையாக வருவதனையும் கண்டு மன வேதனையடைந்தார். மேலும் காரமுனை கிராமத்தில் அமைந்துள்ள ஆனைசுட்டகட்டு குளத்தினையும் பார்வையிட்டார்.

இத்துயரங்களை நேரில் கண்ட மாகாண சபை உறுப்பினர் உடனடியாக தனது தொலைபேசியில் மட்டு மாவட்ட அரசாங்க அதிபர், உள்ளுராட்சி உதவி ஆனையாளர், மாவட்ட வன அதிகாரி மற்றும் கிழக்கு மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் ஆகியோரை தொடர்புகொண்டு இக்கிராமங்களில் மக்கள் படும் துயரங்களை எடுத்துரைத்தார்.

அதன்பிற்பாடு பொதுமக்களுக்கு உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர்…

இன்று நான் இக்கிராமங்களுக்கு நேரில் பார்வை இட வந்ததினால் பொதுமக்கள் படும் துயரங்களை என்கண்களால் கானக்கூடியதாக இருந்தது. இப்படியான பிரதேசங்களில் வாழும் மக்களின் துயரங்களை நேரடியாக சென்று மாவட்டத்தில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மக்களின் குறையினை கேட்டு நிவர்த்தி செய்துகொடுக்க முன்வரவேண்டும் இன்று இக்கிராமங்களுக்கு வந்துள்ள நான் பொதுமக்களின் நலனுக்காக தன்னாலான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

இந்நிகழ்வில் காரமுனை ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் கே.எல்.எம். அசனார், செயலாளர் எஸ். நளீம் உட்பட நிருவாக சபை உறுப்பினர்கள், அப்பிரதேசத்திற்கு பொருப்பான கிராம சேவை உத்தியோகத்தர், மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் சபையின் பிரதித்தலைவர் ஜூனைட் நளீமி, அப்பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் என பலர் கலந்துகொண்டனர்.

(M.T. ஹைதர் அலி)

LEAVE A REPLY