பெற்றோர்களாகிய நாம் எம்பிள்ளைகளின் கல்விக்காக தியாகங்டகளை மேற்கொள்ள வேண்டும்: ஷிப்லி பாறுக்

0
173

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் விஷேட வேண்டுகோளின் அடிப்படையில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வறிய குடும்பத்தை சேர்ந்த 100 மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளை வழங்கும் நிகழ்வின் இரண்டாம் கட்டமாக காத்தான்குடி மட்/மம/ ஹுசைனியா பாடசாலையில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் அப்பியாசக் கொப்பிகள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், பாடசாலை அதிபர், ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர்….

மாணவர்களாகிய அனைவருக்கும் மார்க்க கல்வியினையும் ஒழுக்க விழுமியங்களையும் திறம்பட வழங்கும்போது அவர்கள் பாடசாலையில் மட்டுமல்லாமல் சமூகத்திலும் சிறந்த ஒழுக்க சீலர்களாக உருவாகுவதுடன் பெற்றோர்களுக்கும் சமூகத்திற்கும் நற்பெயரை பெற்றுதருவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. பிள்ளைகளின் கல்வி விடயத்தில் என்ன என்ன தியாகங்களை செய்யமுடியுமோ அத்தனை தியாகங்களையும் செய்ய வேண்டும், அவர்களுக்கு கல்வியை தவிர வேறு ஒன்றினையும் அவர்களுடைய எதிர்காலத்திற்காக கொடுத்து விடமுடியாது, பெற்றோராகிய நீங்கள் தமது பிள்ளை எதிர்காலத்தில் ஒரு கூலிதொழிலாளியாகவோ, சமூகத்தில் மதிக்கப்படாத ஒருவராகவோ உருவாகுவதற்கு விரும்பமாட்டீர்கள் எனவே நீங்கள் தங்களது பிள்ளைகள் சிறந்ததோர் பிள்ளையாக வரவேண்டுமெனில் தனக்குள்ள பிரச்சனைகளை அனைத்தையும் பொறுமையுடன் கையாண்டு தியாகத்துடன் செயற்பட வேண்டும்,

அவ்வாறு செய்வீர்ளானால் கல்வியானது தங்களின் கௌரவத்தினை உயர்வாக்கி தேடித்தரும், நீங்கள் வீட்டில் இருக்கும் போது தொலைக்காட்சி பார்க்க வேண்டுமென அதனை திறக்கும் பொழுது நீங்கள் நினைக்க வேண்டும் எமது பிள்ளையின் கல்வியினை மூடுகின்றேன் என்று. ஆகவே பெற்றோராகிய நீங்கள் மாலையானதும் அவர்களை குர்ஆனை ஒதவைத்து அதன்பின் பாடசாலை பாடங்களை அவர்களுடன் அமர்ந்து அதனை கற்றுக்கொடுக்க வேண்டும், மேலும் அவர்களுக்கு சிறந்த மார்க்க கல்வியினை கட்டாயம் வழங்க வேண்டும் அவ்வாறு நீங்கள் வழங்கும் பட்சத்தில் அவர்களிடம் ஒழுக்கம், நற்பண்பு, கல்வி என்பன தானாக அவர்களிடத்தில் வரும் இதனால் அவர்கள் இன்ஷா அல்லாஹ் சிறந்ததோர் கல்விமானாக சமுகத்தில் மதிக்கப்படுவார்களாக உருவாக்குவார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

அதற்கு அனைத்து பெற்றோர்களும் தியாகத்துடன் பாடுபடவேண்டும். இப்பாடசாலையின் அபிவிருத்தியானது மாணவர்களின் திறமையில் தங்கியுள்ளது அவர்களின் கல்வித்தரம் அதிகரிக்கும் பட்சத்தில் பாடசாலையில் தேவைகள், குறைபாடுகள் தானாக நிவர்த்தி செய்யப்பட்டு பாடசாலையானது அபிவிருத்தியடையும் அதற்காக அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும். மேலும் எதிர்காலத்தில் இன்ஷா அல்லாஹ் இப்பாடசாலையின் வளர்ச்சிக்கு என்னாலான சகல முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்று தனதுரையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

(M.T. ஹைதர் அலி)

LEAVE A REPLY