ஓய்வு அறிவித்தார் நியூசிலாந்து வீரர் எலியட்

0
109

நியூசிலாந்து அணியின் சகலதுறை வீரரான எலியட் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் பிறந்தாலும் எலியட்டுக்கு அந்த நாட்டின் தேசிய அணியில் இடம் கிடைக்கவில்லை. பின்னர் நியூசிலாந்துக்கு குடியேறி 2008ல் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.

கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக்கிண்ணப் போட்டியில் பங்கேற்ற எலியட் அரையிறுதியில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக போட்டியில் 84 ஓட்டங்கள் குவித்து அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றார்.

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் டி20 உலகக்கிண்ணப் போட்டியில் இடம்பெற்றிருந்தார். இதில் நியூசிலாந்து அரையிறுதியில் தோற்றது.

இந்நிலையில் எலியாட் ஒருநாள் போட்டியில் இருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார்.

இதுவரை 83 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள எலியட், 1976 ஓட்டங்களை குவித்துள்ளார்.

LEAVE A REPLY