விசேட வழிகாட்டல் கருத்தரங்கு

0
91

இம்முறை ஜாமிஆ நளீமியா மற்றும் ஏனைய இஸ்லாமிய நிலையங்களுக்கு நேர்முகப்பரீட்சைக்காக செல்ல இருக்கும் மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கான விசேட வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்று காத்தான்குடி ராபிததுந் நளீமிய்யீன் – நளீமிய்யா பழைய மாணவர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 05.04.2016 செவ்வாய்க்கிழமை மாலை 04.00 மணி முதல் காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலைய பள்ளிவாயலில் இக்கருத்தரங்கு இடம்பெறவுள்ளது. இதில் இஸ்லாமியக் கல்வியின் முக்கியத்துவம், நேர்முகப் பரீட்சை மற்றும் எழுத்துப் பரீட்சைகளை வெற்றிகரமாக எதிர்கொள்வது எவ்வாறு? ஆகிய தலைப்புகளில் கலந்துரையாடப்படவுள்ளது. மேலும் கருத்தரங்கின் விசேட அம்சமாக முன்மாதிரி வினாத்தாள்கள் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமியத் துறையில் தம் உயர் கல்வியைத் தொடர இருக்கும் மாணவர்களின் நலன் கருதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தங்களது பெயர் விபரங்களை பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டிக்கொள்கின்றனர்.

LEAVE A REPLY