காத்தான்குடி ஆற்றங்கரை மனித நேயம் பேணும் சிரமதானம் மூலம் துப்பரவு

0
333

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

DSC_7292தேசிய நுளம்பு வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆட்கொல்லி டெங்கு நோய் ஒழிப்பு வேலைத்திட்டங்கள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஓர் அங்கமாக காத்தான்குடி-05 ஆற்றங்கரைப் பகுதி இன்று 01 வெள்ளிக்கிழமை மனித நேயம் பேணும் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.

164ஏ கிராம சேவகர் பிரிவுக்கான கிராம சேவையாளர்; ஏ.யு.ஏ. புவாத் தலைமையில் இடம்பெற்ற மேற்படி சிரமதான நிகழ்வில் 164 ஏ கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது டெங்கு நுளம்பு பரவுவதற்கான பொருட்கள், அழுக்குகள், குப்பை கூழங்கள், டின்கள், டயர்கள் அகற்றப்பட்டு மனித நேயம் பேணும் சிரமதானம் மூலம் குறித்த பகுதி துப்பரவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

DSC_7283 DSC_7284 DSC_7293 DSC_7296 DSC_7299 DSC_7302 DSC_7303

LEAVE A REPLY