(Photos) கிழக்கின் ஆடைத்தொழிற்சாலை ஏறாவூரில் ஜனாதிபதியால் திறப்பு

0
288

Eastern Garments 12ஏறாவூரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கிழக்கு ஆடைத்தொழிற்சாலை இன்று (01) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் திறந்து வைக்கப்பட்டது.

இதன் போது ஏறாவூரில் அமைக்கப்பட்டுள்ள ஆடைத்தொழிற்சாலை மற்றும் நெசவு உற்பத்தி தொழிற்சாலை என்பன திறந்து வைக்கப்பட்டன.

சுமார் 200 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த ஆடைத்தொழிற்சாலை மற்றும் நெசவு உற்பத்தி நிலையம் ஆகியவற்றில், சுமார் ஆயிரம் பேருக்கு தொழில்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட்டின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வைபவத்தில் அமைச்சர் ரஊப் ஹக்கீம், மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸரின் பெர்ணான்டோ, பாராளுமன்ற உறுப்பினர்களான அலிசாஹிர் மௌலானா மற்றும் எம்.ஐ. மன்சூர் ஞா. ஶ்ரீநேசன், சி. யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அரசாங்க அதிகாரிகள் சமய தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Eastern Garments 1 Eastern Garments 2 Eastern Garments 3 Eastern Garments 4 Eastern Garments 5 Eastern Garments 6 Eastern Garments 7 Eastern Garments 8 Eastern Garments 9 Eastern Garments 10 Eastern Garments 11 Eastern Garments 14 Eastern Garments 15

LEAVE A REPLY