ஜனாதிபதி இன்று ஏறாவூர் பயணம்

0
241

கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(01) வெள்ளிக்கிழமை ஏறாவூர் பிரதேசத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

இன்றைய தினம் பிற்­பகல் 2 மணிக்கு ஏறா­வூரில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள ஆடைத்­தொ­ழிற்­சாலை மற்றும் கைத்­தறி உற்­பத்தி தொழிற்­சாலை ஆகி­ய­வற்றை திறந்து வைக்­க­வுள்ளார் என கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரி­வித்தார்.

இன்று பிற்பகல் 3.00 மணியளவில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏனைய அதிதிகளாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட், கிழக்கு மாகாண ஆளுனர், பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சின் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

LEAVE A REPLY