தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான கருத்தரங்கு: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு

0
83

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அரசியலமைப்பு மாற்றத்துடன் எதிர்பார்க்கப்படும் பிரதான மாற்றங்களில் ஒன்றாக தேர்தல் சீர் திருத்தம் அமைந்துள்ளது.

நூறு நாள் வேலைத்திட்ட அரசாங்கத்தில் கொண்டுவரப்பட்ட 19வது திருத்தத்துடன் இணைத்து கொண்டு வரப்படவிருந்த தேர்தல் சீர்திருத்தமானது கட்சிகளுக்கிடையே இணக்கப்பாடு ஏற்படாததால், தேர்தல் சீர்திருத்தம் குறித்த தனியான சட்ட மூலம் 20 வது திருத்தச் சட்ட மூலமாக பின்னர் அரசாங்கத்தினால் முன் வைக்கப்பட்டது.

எனினும் அப்போது பொதுத் தேர்தல் ஒன்றை அவசரமாக எதிர்நோக்கி இருந்த சூழ்நிலையில் 20வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி புதிய தேர்தல் முறையின் கீழ் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான அவகாசம் இல்லை என்ற காரணத்தினாலும் கட்சிகளிடையே போது இணக்கப்பாட்டினை ஏற்படுத்த முடியாமல் போனமையினாலும் 20 வது திருத்தம் நிறைவேற்றப்படாமலே பொதுத்தேர்தல் நடந்து முடிந்தது.

ஆனால் பாராளுமன்ற, மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்ற மட்டங்களில் சிறுபான்மைக் கட்சிகளினதும் சிறிய கட்சிகளினதும் பிரதிநிதித்துவத்தை பெருமளவில் பாதிக்கின்ற இவ்விடயம் பலரது கவனத்த்யும் ஈர்த்துள்ளது.

அந்த வகையில் சிவில் சமூக செயற்பாட்டளர்களிடையே விழிப்புணர்வையும் தெளிவையும் ஏற்படுத்தும் நோக்கில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எதிர்வரும் 2016 ஏப்ரல் 2 ஆம் திகதி காத்தான்குடியில் உத்தேச தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான கருத்தரங்கொன்றை நடத்த தீர்மானித்துள்ளது.

இக்கருத்தரங்கின் வளவாலராக கலாநிதி சுஜாதா கமகே கலந்து கொள்ளவுள்ளார். இவர் தேர்தல் முறைமைகள் பற்றி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுவருவதுடன் குறித்த விடயம் தொடர்பில் பல்வேறு மட்டங்களிலும் கலந்துரையாடல்களை நடத்தி வரும் ஒரு செயட்பாட்டளரும் ஆய்வாளருமாவார். மேற்படி நிகழ்வுக்கு அம்பாறை, மட்டக்காலப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து கல்விமான்களும் சிவில் சமூக செயட்பாட்டளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

அழைப்பு கிடைக்காதவர்கள் எவராவது இக்கருத்தரங்கின் முக்கியத்துவம் கருதி கலந்து கொள்ள விரும்பினால் பின்வரும் 0773868126 இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தமது பெயர்களை பதிவு செய்து கொள்ள முடியும்.

LEAVE A REPLY