புதிய தொழில்நுட்பத்தில் ‘செவ்வாய்’ கண்காட்சி: மைக்ரோசாப்டுடன் இணைந்து நாசா ஏற்பாடு

0
173

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறு வனமான நாசா, மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து செவ்வாய் கிரக (டெஸ்டினேஷன்: மார்ஸ்) கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தின் பார்வையாளர் வளா கத்தில் வரும் கோடை காலத்தில் இந்த கண்காட்சி நடைபெறும் என்று நாசா தெரிவித்துள்ளது.

இதில், கடந்த 1969-ல் நிலவில் நடந்த விண்வெளி விஞ்ஞானி பஸ் ஆல்ட்ரின் வழிகாட்டியாக செயல்படுவார். இவர் இங்கு வரும் பார்வை யாளர்களுக்கு, ‘ஹோலோ லென்ஸ் ஹெட்செட்’ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி செவ்வாய் கிரகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள தோற்றப் பதிவுகளை காண்பித்து அதுபற்றி விளக்குவார்.

வரும் 2030-ல் மனிதர்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. இந் நிலையில், இந்த கண்காட்சி செவ்வாய் கிரக சுற்றுப் பயணத்துக்கான முன் அனுபவ மாக இருக்கும் என்று கருதப் படுகிறது.

LEAVE A REPLY