ஓட்ஸ் வெஜிடபிள் கஞ்சி

0
102

தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் – 100 கிராம்
வெங்காயம் – 1
தக்காளி – 1 சிறியது
கேரட், பீன்ஸ் – சிறிதளவு.
பச்சைப் பட்டாணி – 2 டீஸ்பூன்
சீரகம், மிளகு பொடித்தது – 1 டீஸ்பூன்
கரம்மசாலா தூள் – ¼ டீஸ்பூன்
ஆம்சூர்பொடி – ¼ சிட்டிகை
தண்ணீர் – 3 கப்
உப்பு – ½ டீஸ்பூன்

செய்முறை:-

* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* தண்ணீரைக் கொதிக்க வைத்து கொதித்ததும் அதில் ஓட்ஸை போட்டு வேக வைக்கவும்.

* கேரட், பீன்சை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கேரட், பீன்ஸ், பட்டாணி, தக்காளி, வெங்காயத்தை அதனுடன் வேகப்போடவும்.

* வெந்ததும் கண்ணாடி போல ஒட்டாமல் வரும்போது உப்பும், மிளகு சீரகப் பொடியும் சேர்த்து இறக்கவும்.

* சுவையான சத்தான ஓட்ஸ் வெஜிடபிள் கஞ்சி ரெடி.

LEAVE A REPLY