ஜீ.எல். பீரிசை விசாரிக்க வேண்டும்; கயந்த கருணாதிலக்க

0
131

வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் வெள்ளவத்தைக்கு கொண்டு வரப்படவிருந்தவை என தெரிவித்த பேராசிரியர் ஜீ.எல். பீரிசை விசாரிக்க வேண்டும் என அரசாங்கம் பாதுகாப்பு செயலாளரிடம் கோரிக்கையை முன்வைத்தது.

இதனை ஏற்றுக் கொண்ட பாதுகாப்புச் செயலாளர் ஜீ.எல். பீரிசிடம் விசாரணைகள் நடத்தப்படும் என்ற உறுதியை வழங்கினார்.

கொழும்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது அரசின் சார்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க அவ் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட பாதுகாப்பு செயலாளர் கருணசேன ஹெட்டியாராச்சியிடம் இக்கோரிக்கையை முன்வைத்தார்.

LEAVE A REPLY