சாஹிரா வித்தியாலயத்திற்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் நிதி கையளிப்பு

0
128

(ஹைதர் அலி)

மட்டக்களப்பு மத்தி கல்வி வயலத்தின், கோறளைப்பற்று மேற்கு கோட்டத்திற்குட்பட்ட பாடசாலையான மட்/மம/ஓட்டமாவடி சாஹிரா வித்தியாலயத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் விஜயமென்றினை மேற்கொண்டிருந்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன, மத வேறுபாடின்றி தமிழ், முஸ்லிம் பாடசாலைகளுக்கு விஜயங்களை மேற்கொண்டு பாடசாலை மாணவர்களின் கல்வி விடயங்கள், பாடசாலைகளின் அபிவிருத்தி மற்றும் வளப்பற்றாக்குறை சம்மந்தமாக நேரில் சென்று பார்வையிட்டு மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்காக அர்பபணிப்புடன் தன்னாலான பல அபிவிருத்திகளை மேற்கொண்டு வருவதோடு, கூடுதலான தேவைப்பாடுகளை தனது சொந்த நிதியிலிருந்து பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக வழங்கி வருவதும் குறிப்பிடத்தகக்தாகும்.

அந்த வகையில் மட்/மம/ஓட்டமாவடி சாஹிரா வித்தியாலயம் உருவாக்குவதற்காக கொள்வனவு செய்யப்பட்ட காணிக்காக தனது சொந்த நிதியிலிருந்து ரூபா 50,000/- வழங்குவதாக பாடசாலை அதிபர் மற்றும் அபிவிருத்தி குழுவினரிடம் வாக்குறுதியளித்திருந்தார்.

அந்த வகையில் 2016.03.29ஆந்திகதி இந்நிதியினை பாடசாலை அதிபர் அபுதாஹிர் அவர்களிடம் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் கையளித்தார். இந்நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY