(Video) மத்திய பரிஸில் வெடிப்பு சம்பவம்!

0
141

explosion-at-central-paris-gas-leakபிரான்ஸின் தலைநகரான பரிஸில் இன்று (01) பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

தீவிரவாத செயற்பாடு என ஆரம்பத்தில் அஞ்சப்பட்டபோதிலும், அது சாதாரணமாக ஏற்பட்ட விபத்துச் சம்பவம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரி வாயு கசிவினாலேயே குறித்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

சமூக வலைத்தளங்களில் இவ்வெடிப்புச் சம்பவம் தொடர்பான படங்கள் வெளியிடப்பட்டவாறு காணப்படுகின்றன. அவற்றில், தீயினால் கூரை ஒன்று உடைந்து எரிகின்ற காட்சிகள் மற்றும் அப்பகுதி எங்கும் புகை மூட்டமாக தென்படும் காட்சிகள் காணப்படுகின்றன.

LEAVE A REPLY