அமிர் அலி வித்தியாலத்திற்கு சிப்லி பாரூக் விஜயம்

0
219

மட்டக்களப்பு மத்திய கல்வி வலையதிற்குட்பட்ட பூநொச்சிமுனை, மட்/மம/அமீர் அலி வித்தியாலயத்தின் குறைபாடுகளை நேரடியாக பார்வையிட்டு அறிந்துகொள்ளும் நோக்கோடு கடந்த பெப்ரவரி மாதம் விசேட விஜயம் ஒன்றினை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கொண்டிருந்தார்.

அதன்போது பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் விடுத்த முக்கிய கோரிக்கைகளில் உடனடியாக தீர்க்கக்கூடிய தேவையாக இருந்த இவ்வருடம் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான விசேட வினாத்தாள்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்குவதாக கூறியிருந்தார்.

அதனடிப்படையில், பாடசாலை மாணவர்களுக்கு தரம் 05 புலமை பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள்களை உத்தியோகபூர்வமாக பாடசாலை அதிபரிடம் கையளிக்கும் வைபவம் மிக அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகான சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள்,பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் போது விஷேட உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்,

இவ்வாறன எல்லைப்புற, அபிவிருத்தியில் பின்தங்கிய பாடசாலைகளின் கல்வி மேம்பாட்டிற்காக நாம் தொடர்ந்தும் பல்வேறு உதவிகளை வழங்கிவருகிறோம். அதன் அடிப்படையிலேயே புலமை பரிசில் பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள்களை தற்போது வழங்கியுள்ளோம்.

இப்பாடசாலையின் கட்டிடமானது பூரனப்படுத்தப்படாமல் அரைகுறையாகக் காணப்பட்டது அதனை 2013ம் ஆண்டின் மாகாணசபையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து இருபது இலட்சம் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்துபாடசாலையின் கட்டிடத்தேவையினை முழுமையாக பூரணப்படுத்தி அபிவிருத்தியினை மேற்கொண்டிருக்கின்றோம்.

அதேபோன்று கடந்த 2014 ஆண்டில் பாடசாலை நிருவாகத்தினரின் விடுத்த வேண்டுகோளிற்கினங்க பாடசாலை தளபாடங்களுக்காக 50,000.00 ரூபாய் நிதியினை வழங்கியிருந்தோம்.

ஆயினும் பாடசாலை தளபாடங்களுக்கான தேவை மென்மேலும் அதிகாமாக காணப்படுவதனால் இவ்வாண்டும் மேலும் 50,000.00 ரூபா நிதியினை மாகாணசபையினூடாக ஒதுக்கியிருக்கிறோம் இவ்வாறாக நாம் இப்பாடசாலையின் அபிவிருத்திக்கு தொடர்ச்சியான பங்களிப்பினை ஆற்றிவருகின்றோம்.

இவ்வாறான விடயங்களை நாம்சுட்டிக்காட்டுவதன் நோக்கம் எமது அரசு கல்விக்காக மேற்கொள்கின்ற செலவுகளை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும், இவ்வாறு உங்கள் பிள்ளைகளுக்கு கிடைக்கக்கூடிய பெறுமதியான இலவச கல்வியை சிறந்த முறையில் பெற்று பயன்பெற வேண்டுமென்பதாகும்.

உங்கள் பிள்ளைகள் தொடர்ச்சியாக கல்விகற்று உயர்தரம் சித்தியடைந்து பல்கலைக்கழக பட்டப்படிப்புகளை மேற்கொள்ள வேண்டும். பல்கலைக்கழகங்களுக்கு தேர்வாகாத நிலை வரும் வரை ஏதாவது குறுகிய கால பாடநெறிகளை தனியார் நிறுவனங்களில் கற்று வெளிநாடு செல்வது பற்றியோ, கல்வியை இடைநிறுத்துவது பற்றியோ சிந்திக்கக்கூடாது என்று கூறியதுடன், கல்விக்காக எம்மால் முடியுமான அளவு உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருக்கிறோம். அதே போல் பெற்றோர்களாகிய நீங்களும்பிள்ளைகளின் கல்விக்காக அர்பணிப்போடு செயல்பட வேண்டும் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தெரிவித்தார்.

(எம்.ரீ. ஹைதர் அலி)

LEAVE A REPLY