பயனர்களுக்காக அதிரடி மாற்றத்தை அறிமுகம் செய்தது இன்ஸ்டாகிராம்

0
135

புகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்கள் என்பவற்றினை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழும் வசதியனை வழங்கும் முன்னணி நிறுவனமான இன்ஸ்டாகிராம் அதிரடி மாற்றம் ஒன்றினை மேற்கொண்டுள்ளது.

அதாவது இதுவரை காலமும் 15 செக்கன்கள் ஓடக்கூடிய வீடியோ கோப்புக்களையே பகிரும் வசதியினை தந்திருந்த நிலையில் தற்போது 60 செக்கன்கள் வரை ஓடக்கூடிய வீடியோக்களை பகிரக்கூடிய வகையில் மாற்றயமைத்துள்ளது. தற்போது இவ் வசதியானது சில பயனர்களுக்கே கிடைக்கக்கூடியதாக இருப்பதுடன் எதிர்வரும் மாதங்களில் அனைத்து பயனர்களும் இவ் வசதியினை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் iOS சாதனங்களுக்கான இன் கிராம் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பும் வரும் வாரங்களில் வெளியிடப்படவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

LEAVE A REPLY