‘குவாந்தனாமோ கைதிகள் வேறு நாடுகளுக்கு மாற்றப்படுவர்

0
172

குவாந்தனாமோ இராணுவ சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் டஜன் கணக்கான கைதிகளை, அவர்களை ஏற்க இணங்கியுள்ள குறைந்தது இரண்டு நாடுகளுக்கு இடமாற்றம் செய்யவுள்ளதாக அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அந்நாட்டு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.

குவாந்தனாமோ சிறையை மூடிவிடுவதற்கு அதிபர் ஒபாமா எடுத்துவரும் புதிய முயற்சிகளை இந்த அறிவிப்பு குறிப்பதாக பார்க்கப்படுகின்றது.

அடுத்த சில நாட்களில் முதலாவது இடமாற்றம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

2007-ம் ஆண்டிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்ற யேமனிய பிரஜை ஒருவரும் இவர்களில் உள்ளதாக நம்பப்படுகின்றது.

குவாந்தனாமோ விரிகுடா முகாமில் 91 கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். 2002-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 800 ஆக இருந்தது.

தான் பதவிமுடிந்து செல்ல முன்னர் அந்த இராணுவ சிறையை மூடிவிடவுள்ளதாக அதிபர் ஒபாமா கடந்த மாதம் அறிவித்திருந்தார்.

தென்கிழக்கு கியூபாவில் உள்ள அமெரிக்க கடற்படை முகாமில் இந்த சிறை அமைந்துள்ளது.

அமெரிக்காவில் செப்டெம்பர் 11 தாக்குதல்கள் நடந்த பின்னர், அப்போதைய அதிபர் ஜார்ஜ் டப்ளியு புஷ், வெளிநாட்டு பயங்கரவாத சந்தேகநபர்களை தடுத்துவைப்பதற்காக இந்த சிறையை பயன்படுத்தத் துவங்கினார்.

LEAVE A REPLY