மேம்பாலம் இடிந்து விழுந்தது; 10 பேர் பலி

0
252

மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய கொல்கத்தாவில் போக்குவரத்து அதிகம் உள்ள கிரிஷ் பார்க் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகல் ஊழியர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது, பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் பல தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்த பொலிசாரும் மீட்புக்குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்தில் 10 பேர் இறந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 100க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என விபத்தை நேரில் பார்த்த ஒருவர் நிருபர்களிடம் கூறியுள்ளார்.

LEAVE A REPLY