அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை இழந்த அதிபர் அன்வரை அந்நூருக்கு தாருங்கள்: பெற்றோர்

0
167

(சேனையூரான்)

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அதிபராகக் கடமையாற்றி தற்பொழுது அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிமனையில் இருக்கும் அதிபர் அன்வரை கோணாவத்தை அந்நூர் மகாவித்தியாலயத்திற்கு நியமிக்குமாறு கோணாவத்தைப் பெற்றோர்கள் ஒருமித்து மாகாணப் பணிப்பாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

அந்நூர் மகாவித்தியாலயத்தின் உயர்வினை இன்று அதிகாரத்தில் இருக்கும் சிலர் குழிதோண்டி புதைக்க நினைக்கின்றனர். அந்நூருக்கு வரும் அபிவிருத்திகளை வேறுபக்கம் திருப்பிவிடுகின்றனர். கல்விக்காக கஷ்டப்படும் மாணவர்களுக்கு செய்யும் துரோகமாகவே இதனை காணக்கிடைக்கின்றது.

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலைக்கு வரலாற்று சாதனையை நிலைநாட்டிய அன்வர் அதிபரை சில குள்ளநரிகளின் சுயநலத்துக்காக மாற்றியதனையும் கல்வியலாளர்கள் வன்மையாகக் கண்டிக்கின்றனர்.

இன்று ஆசிரியைகளுக்கும் ஆசிரியருக்கும் தன் மோசமான வார்த்தைகளால் பேசுகிறார் இன்றைய அதிபர் என்ற குற்றச்சாட்டும் வந்து கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று அரசியல்வாதிகளுக்கு பின்னால் வால் பிடித்துத் திரியும் ஆசிரியர்கள் சிலரும் அவர்களின் சகாக்களும் கல்வி நடவடிக்கைகளைக் குளப்பியடிப்பது வேதனையான விடையம்.

எனவே, அட்டாளைச்சேனை அந்நூர் மகாவித்தியாலயத்திற்கு உடனடியாக ஆளுமையும் நிருவாகமும் திறனையும் தன்னகத்தே கொண்ட அதிபர் அன்வரை நியமிக்குமாறு கோணாவத்தை மக்கள் ஒன்றினைந்து கோர்க்கை விடுகின்றனர்.

இதனைத் தடுக்க நினைக்கும் அதுகாரிகளின் உருவ பொம்மை எரித்து போராட்டம் பண்ணவும் ஆயத்தமாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY