மட்டக்களப்பு நகரில் 5 கடைகளில் திருட்டு

0
159

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் இன்று (31) வியாழக்கிழமை அதிகாலை ஐந்து வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு-திருகோணமலை பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து சாலைக்கு அண்மித்த பகுதியில் உள்ள ஐந்து வர்த்தக நிலையங்களே இவ்வாறு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இரண்டு தொலைத்தொடர்பு நிலையங்கள், ஒரு மருந்துவிற்பனை நிலையம், சில்லறைக்கடையொன்று மற்றும் தொலைபேசி விற்பனை நிலையம் ஆகியவையே இவ்வாறு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளன.

இந்த ஐந்து வர்த்தக நிலையங்களிலும் இருந்து எவ்வளவு பெறுமதியான பணமும் பொருட்களும் கொள்ளையிடப்பட்டுள்ளன என்பது தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அண்மைக்காலமாக மட்டக்களப்பில் வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் அப்பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

IMG_0128 IMG_0131 IMG_0132 IMG_0133 IMG_0135 IMG_0137

LEAVE A REPLY