ஏறாவூரில் ஜனாதிபதி

0
106

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆடைத் தொழிற்சாலை மற்றும் கைத்தறி நெசவுத் தொழிற்சாலைகளைத் திறந்து வைக்கும் நிகழ்வு நாளை (01) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெறும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்த முதலமைச்சர் கூறியதாவது,

சுமார் ஐயாயிரம் குடும்பங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வாழ்வாதாரத்தை வழங்கக் கூடிய ஆடைத் தொழிற்சாலை மற்றும் கைத்தறித் தொழிற்சாலை என்பனவற்றைத் திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஏப்ரல் 1ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு ஏறாவூருக்கு வருகை தரவிருக்கின்றார்.

நல்லாட்சி ஏற்படுத்தப்பட்ட பின்னர் கிழக்கு மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தித் திட்டமொன்று ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.

வறுமை ஒழிப்புக்காக தொழிற்சாலைகளை ஆரம்பித்து அதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு பொருளாதாரத்தை ஈட்டிக் கொள்ளும் கனவை நனவாக்கும் நோக்குடன் ஏறாவூரில் 6 தொழிற்சாலைகள் திட்டம் அமுலாகிறது.

இதனடிப்படையில் முதற்கட்டமாக ஒரு ஆடைத் தொழிற்சாலையும், ஒரு கைத்தறித் தொழிற்சாலையும் வெள்ளிக்கிழமை மாலை ஏறாவூரில் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படவிருக்கின்றன.

இதன் மூலம் ஏறாவூரில் நேரடியாக தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் குடும்பங்களும், மறைமுகமாக மூவினங்களையும் சேர்ந்த 3000 குடும்பங்களும் வேலைவாய்ப்பைப் பெறுவர் என்றும் முதலமைச்சர் கூறினார்.

தொழிற்சாலைகளைத் திறந்து வைப்பதற்காக பெப்ரவரி 06 ஆம் திகதி ஏறாவூருக்கு வருகை தரவிருந்த ஜனாதிபதியின் விஜயம் முன்னர் தவிர்க்க முடியாத காரணங்களால் முன்னர் பிற்போடப்பட்டிருந்தது.

DSC03220 DSC03219

LEAVE A REPLY