மயில் கொலை சம்பவம்: மணைவி வாக்குமூலம்

0
192

சட்டவிரோமான முறையில் மயிலொன்றை வேட்டையாடி நபர் தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பந்தப்பட்ட சந்தேகநபரின் மனைவி பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலமளித்துள்ளார்.

‘சம்பவம் நடந்த தினத்தன்று, திருமண வீடொன்றுக்குச் சென்றுவிட்டு வரும் போது தனது கணவர் பயணித்த வான் முன்னால் மயிலொன்று மோதுண்டு இறந்துவிட்டது.

பின்னர் மயிலை, அவர் தங்கியிருந்த கூடாரத்தில் வைத்து எடுத்த புகைப்படத்தை யாரோ இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்’ என மனைவி பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலமளித்துள்ளார்.

மேலும், தற்போது இத்தாலியில் இருக்கும் தனது கணவர் எதிர்வரும் ஜுன் மாதம் இலங்கைக்கு வருவார் எனவும் அவர் வந்தவுடன் பொலிஸ் நிலைத்துக்கு அழைத்துவருவதாகவுமம் அவர் கூறியுள்ளார்.

இச்சம்பமானது கடந்த 2015ஆம் ஆண்டு ஜுன் மாதம் நடைபெற்றது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY