வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவை கைது செய்ய கோர்ட் உத்தரவு

0
94

வங்காளதேச முன்னாள் பிரதமரும் பிரதான எதிர்க்கட்சி தலைவருமான கலிதா ஜியாவை கைது செய்ய கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவதி மாதம் அரசுக்கு எதிராக கலிதா ஜியாவின் வங்காளதேச தேசியவாத கட்சி தீவிர போராட்டத்தில் ஈடுபட்டது. அப்போது ஜத்ரபாரி பகுதியில் பயணிகள் பஸ்சுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் 29 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக கலிதா ஜியா, அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட 38 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் டாக்காவில் உள்ள பெருநகர செசன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி கம்ரூன் உசைன், இவ்வழக்கில் கலிதா ஜியா (வயது 70) உள்ளிட்ட 28 பேரை கைது செய்ய இன்று வாரண்ட் பிறப்பித்தார். மேலும், இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தி ஏப்ரல் 27-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு கலிதா ஜியாவுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. எனினும், கோர்ட் விதித்த காலக்கெடுவுக்குள் அவருக்கு ஜாமின் பெற வாய்ப்பு உள்ளதாக அவரது வழக்கறிஞர்களும், சட்ட வல்லுநர்களும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY