நேபாளம் நாட்டில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.7 அலகாக பதிவு

0
52

நேபாள நாட்டின் திபெத் எல்லைப் பகுதியில் நேற்று மாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அலகில் 4.7 ஆக இது பதிவாகி உள்ளது.

தலைநகர் காத்மண்டுவில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிந்துபால்சோக் மாவட்டத்தில் மாலை 6 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

முன்னதாக இம்மாத தொடக்கத்தில் ஓக்கல்துங்கா மாவட்டத்தில் மையமாக கொண்டு 4.1 அலகில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

கடந்த ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுத்தை அடுத்து, இதுவரை சுமார் 442 முறை ரிக்டர் அலகில் 4-க்கும் அதிகமாக உணரப்பட்டுள்ளது.

LEAVE A REPLY